/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ராணிப்பேட்டை கலெக்டர் பனப்பாக்கத்தில் ஆய்வு
/
ராணிப்பேட்டை கலெக்டர் பனப்பாக்கத்தில் ஆய்வு
ADDED : ஜூலை 23, 2024 07:45 PM

நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், பனப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில், ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா நேற்று செய்தார்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தார். இதையடுத்து, பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றலின் முன்னேற்றம் குறித்து, தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். அப்போது, தலைமை ஆசிரியர் அபிதா என்பவர், ஆறாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக உள்ளது. அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டரிடம் அவர் உறுதியளித்தார்.
பேரூராட்சி அலுவலகத்தில் பதிவேடுகளை சரி பார்த்தார். நெடும்புலி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் மின்னணு சான்றுகள் வழங்குவதில் ஏற்படும் சிக்கலை கேட்டறிந்தார்.