/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பக்தர்கள் உடலில் தசையை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா
/
பக்தர்கள் உடலில் தசையை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா
பக்தர்கள் உடலில் தசையை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா
பக்தர்கள் உடலில் தசையை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா
ADDED : மே 30, 2024 07:32 PM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, உடலில் தசையை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, வேண்டுதல் வைக்கும் வினோத திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், தங்கள் உடலிலுள்ள தசையை அறுத்து வழிபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கன்னு கிராமத்திலுள்ள கிராம காவல் தெய்வமான, மண்டி அம்மன் ஆலய திருவிழா நடக்கிறது. நேற்று, 2வது நாள் திருவிழாவில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டி அம்மன், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையிலும், வேண்டுதல் வைக்கும் வகையிலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர், தங்கள் உடல் சதையை, நெற்றி, கால், நெஞ்சு, வயிறு போன்ற பகுதிகளிலிருந்து அறுத்து வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.