/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.74.50 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.74.50 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 10, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆற்காடு சட்டசபை நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று முன்தினம் இரவு, கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வேலுாரிலிருந்து வந்த காரை சோதனை செய்தனர். காரில், 74.50 லட்சம் ரூபாய் இருந்தது. காரில் வந்தவர்களிடம் விசாரித்ததில், ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் நிரப்ப எடுத்து செல்வதாக கூறினார்.
ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் அலுவலர் ஏகாம்பரத்திடம் ஒப்படைத்தனர்.

