/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கரில் பூச்சாட்டு விழா நாளை துவக்கம்
/
சோளிங்கரில் பூச்சாட்டு விழா நாளை துவக்கம்
ADDED : ஆக 06, 2024 10:50 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில்.
இந்த கோவிலில், ஆடி மாதம், உத்திரம் நட்சத்திரத்தில் துவங்கி ஐந்து நாட்களுக்கு அமிர்தவல்லி தாயாருக்கு பூச்சாட்டு விழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, நாளை 8 ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மலைக்கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடைபெற உள்ளது.
காலை 11:00 மணிக்கு, புஷ்பயாக மண்டபத்திற்கு அமிர்தவல்லி தாயார் எழுந்தருளுகிறார். 1:00 மணிக்கு நவகிரக அலங்கார சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். 2:00 மணி முதல் 4:00 மணி வரை திருப்பாவை, வாய்மொழி சாற்றுமறையும், 4:30 மணிக்கு உள்புறப்பாடு மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெறும்.