/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பழிக்கு பழியாக தொழிலாளி வெட்டிக் கொலை
/
பழிக்கு பழியாக தொழிலாளி வெட்டிக் கொலை
ADDED : செப் 08, 2024 02:41 AM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கிழவனம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 70. இவரது மகன் பாஸ்கர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரனுக்கும் நிலப்பிரச்னை இருந்தது. ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட தகராறில் பாஸ்கரனை, சந்திரன் வெட்டிக் கொன்றார்.
அரக்கோணம் போலீசார், விசாரித்த நிலையில், நேற்று முன்தினம் கிழவனம் பகுதிக்கு சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தபோது, இறந்த பாஸ்கரனின் தம்பி எத்திராஜ், 40, அவரது தந்தை சுப்பிரமணி மற்றும் சிலர், சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு, சந்திரனை கல்லால் தாக்கியும், கத்தியாலும் வெட்டினர். சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அரக்கோணம் தாலுகா போலீசார், சுப்பிரமணி மற்றும் எத்திராஜை கைது செய்தனர். தப்பிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.