/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மின் இணைப்பு துண்டிப்பு மிரட்டல் விடுத்தோர் கைது
/
மின் இணைப்பு துண்டிப்பு மிரட்டல் விடுத்தோர் கைது
ADDED : ஜூலை 24, 2024 10:21 PM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். மின் கட்டணம் செலுத்தாததால், மின் வாரிய இளநிலை பொறியாளர் செல்வகணபதி மற்றும் ஊழியர்கள், சில நாட்களுக்கு முன், அவரது வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் கோபமடைந்த விஜயகுமாரின் மகன்கள் சுந்தர், 34, நவீன், 33, நேற்று முன்தினம் மாலை ஆற்காடு மின்வாரிய அலுவலகம் சென்றனர்.
அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஆபாசமாக பேசி, பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாக, கையில் வைத்திருந்த பெட்ரோலை காட்டி மிரட்டினர். இளநிலை பொறியாளர் செல்வகணபதி புகார் படி, ஆற்காடு டவுன் போலீசார், சுந்தர், நவீனை நேற்று கைது செய்தனர்.