/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
/
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
ADDED : ஜூலை 14, 2025 12:40 AM

சோளிங்கர்:சோளிங்கரில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், மேட்டு குன்னத்துாரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் புவனேஷ், 9; மூன்றாம் வகுப்பு மாணவர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த கோபியின் மகன்கள் மோனிபிரசாத், 10 மற்றும் சுஜன், 8. இவர்கள் ஐந்து மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள். இவர்கள் மூன்று பேரும், நேற்று சரவணனுடன் அவரது வயல்வெளிக்கு சென்றனர்.
சரவணன் அங்குள்ள மேய்ச்சல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவர்கள் மூன்று பேரும், வயல்வெளிக்கு அருகில் உள்ள குளக்கரையில் விளையாடி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் குளத்தில் இறங்கியுள்ளனர். நீச்சல் தெரியாத சிறுவர்கள் மூன்று பேரும், தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தோர் ஓடி வந்து அவர்களை மீட்டு, பாணாவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுவர்கள் மூன்று பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது.