ADDED : மார் 26, 2026 06:38 AM

அ நிறம் | அளவு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பார்த்திபன், 13; 8ம் வகுப்பு படித்தார். அதே பகுதியை சேர்ந்த நிதிஷ், 14; ஏழாம் வகுப்பு படித்தார். மற்றொரு நித்தீஷ், 13; ஆறாம் வகுப்பு படித்தார். நண்பர்களான மூவரும், அருகே உள்ள மணியம்பட்டு ஏரிக்கு குளிக்க சென்றனர்.
நீச்சல் தெரியாத மூவரும், ஏரியில் குளித்து கொண்டிருந்த போது, திடீரென, பார்த்திபன் நீரில் மூழ்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த மற்ற இருவரும், பார்த்திபனை காப்பாற்ற முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக, மூவரும், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவ லறிந்த சிப்காட் போலீசார், விசாரிக்கின்றனர்.
