/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது
/
நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது
நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது
நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது
ADDED : பிப் 02, 2025 08:23 PM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, நுகர்பொருள் வாணிக கிடங்கிலிருந்து, ரேஷன் அரிசி கடத்தி விற்க முயன்ற, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த, அம்மனுாரிலுள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து, சுற்றியுள்ள கிராம ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுகிறது.
அதில், ரேஷன் அரிசியை கடத்தி, விற்பனை செய்வதாக புகார் சென்றது. அதன்படி, வேலுார் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார், அரக்கோணத்திலுள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் நேற்று சோதனை நடத்தினர்.
இதில், 50 கிலோ எடையுள்ள, 31 மூட்டையில், 1,550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. கிடங்கு பொறுப்பாளர் மகாராஜன், 50, எழுத்தர்கள் தமிழ்செல்வன், 48, பார்த்திபன், 53, லாரி டிரைவர் கோபிநாத், 45, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடத்த முயன்ற ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.