/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
லாரியின் டிராலியில் சிக்கி அறுந்து விழுந்த மின்கம்பி
/
லாரியின் டிராலியில் சிக்கி அறுந்து விழுந்த மின்கம்பி
லாரியின் டிராலியில் சிக்கி அறுந்து விழுந்த மின்கம்பி
லாரியின் டிராலியில் சிக்கி அறுந்து விழுந்த மின்கம்பி
ADDED : ஏப் 16, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம் காந்திநகரில், நேற்று சென்னை நோக்கி டாரஸ் லாரி சென்றது. லாரியின் பின்பக்க டிராலி, திடீரென மேல் நோக்கி துாக்கியதால், சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் சிக்கியது.
இதில், மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. லாரி டிரைவர் வாகனத்தை, அங்கேயே நிறுத்தி விட்டு இறங்கி தப்பினார். இதனால், அச்சாலையின் இரு பக்கமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தக்கோலம் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியை சீரமைத்தனர்.