/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மனைவியை கொன்ற வழக்கில் தலைமறைவான கணவன் கைது
/
மனைவியை கொன்ற வழக்கில் தலைமறைவான கணவன் கைது
ADDED : ஜன 16, 2024 12:39 PM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே மனைவி கொலை வழக்கில், ஜாமினில் வந்து, 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த பனப்பாக்கம் அருந்ததிபாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 52, கூலி தொழிலாளி; கடந்த, 2006ல் குடும்ப தகராறில் மனைவி ஆனந்தியை கட்டையால் அடித்து கொலை செய்தார். நெமிலி போலீசார் கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.ஜாமினில் வெளியே வந்தவர், ராணிப்பேட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இந்நிலையில், 2012 டிச.,13ம் தேதி வாய்தாவுக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு அருகே சாத்ஹல்லி என்ற இடத்தில், கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வருவது தெரிந்தது. அங்கு சென்ற நெமிலி போலீசார், ஏழுமலையை நேற்று முன்தினம் கைது செய்தனர்.