ADDED : மே 07, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்துாரை சேர்ந்தவர் சரவணன், 35.
மாற்றுத்திறனாளியான இவர், பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புனிதா; மகன் தீபக், 10; மகள் சரண்யா, 9; சரவணனுக்கு திருமணமாகாத தம்பிகள் சத்தியமூர்த்தி, 28, சவுந்தர், 26, உள்ளனர். இருவரும் ஆற்காடு அருகே, பெட்ரோல் பங்க்கில் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில், சவுந்தர், சத்தியமூர்த்தி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன், இருவரையும் சமாதானம் செய்ய முயன்றதில், அவரது தலையில் இரும்பு ராடால் சத்தியமூர்த்தி தாக்கினார். இதில் சரவணன் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். ஆற்காடு தாலுகா போலீசார், சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.