/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
போலி சான்று அளித்து மத்திய அரசு பணி 8 பேர் மீது வழக்கு பதிவு
/
போலி சான்று அளித்து மத்திய அரசு பணி 8 பேர் மீது வழக்கு பதிவு
போலி சான்று அளித்து மத்திய அரசு பணி 8 பேர் மீது வழக்கு பதிவு
போலி சான்று அளித்து மத்திய அரசு பணி 8 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 26, 2025 09:57 PM
அரக்கோணம்:மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த வட மாநிலங்களை சேர்ந்த எட்டு பேர் மீது, போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது.
இங்கு பயிற்சி பெறுபவர்கள் விமான நிலையம், துறைமுகம், அணு உலைகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
கடந்த மார்ச்சில் வடகிழக்கு மாநிலங்களான அஸாம், நாகாலாந்து, திரிபுரா, மேகலாயா, அருணாசல பிரதேசம், மிஸோரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சி மையத்துக்கு வந்தனர்.
அவர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை சரிபார்ப்புக்காக அந்தந்த மாநில அரசுகளுக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதில், அஸாம் மாநிலம் சில்சார் மாவட்ட பகுதியில் இருந்து தேர்வான நிஷா, கட்டாரியா ருஜிதாதேவி, அஜய் யாதவ், முகேஷ் மெளரியா, சந்திரிகா சிங், அமித்குமார், தன்வீர், நரேந்திர சிங் ஆகிய எட்டு பேருடைய சான்றிதழ்களை அனுப்பி வைத்ததில் அவர்களது சான்றிதழ்கள் போலி என, தெரிந்தது.
இது குறித்து மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நேற்றுமுன்தினம் தக்கோலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேற்று வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
****

