UPDATED : அக் 16, 2026 09:02 PM
ADDED : அக் 16, 2026 08:46 PM

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில், இருவேறு இடங்களில் மின்னல் தாக்கி பசு மாடுகள் உயிரிழந்தன.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்,64. இவரது, பசு மாடு அதே பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தில் நேற்று மாலை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதில் இடி மின்னல், தாங்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோல், பாணாவரம் அடுத்த மேலேறி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமன்,37. இவரது பசு மாடு, அவரது விவசாய நிலத்தில் நேற்று மாலை மேய்ந்து கொண்டிருந்த போது இடி மின்னல், தாங்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
