/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கரில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்
/
சோளிங்கரில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : ஏப் 06, 2025 11:18 PM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
யோக நரசிம்மரின் உற்சவமூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை பிரம்மோற்சவத்தை ஒட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது.
மே 2ம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறும். அதை தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா எழுந்தருள்வார். மே 6ம் தேதி இரவு கருட சேவையும், 8ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெற உள்ளன.