ADDED : அக் 09, 2025 03:05 AM
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஏ.பி.எம்., சர்ச் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 32. வாலாஜாபேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் நேற்று முன்தினம், அப்பகுதியில் பெருமாள் கோவில் விழாவில் மைக்கை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கினார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் சரியான முதலுதவி அளிக்காததால், வெங்கடேசன் இறந்து விட்டதாக கூறி, அவரின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு, திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் போலீசார், பேச்சு நடத்தி, அவர்களை கலைய செய்தனர்.