/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
இ.பி.எஸ்., பிறந்த நாள் வாழ்த்து பேனர் ஒட்டும் நிகழ்ச்சி
/
இ.பி.எஸ்., பிறந்த நாள் வாழ்த்து பேனர் ஒட்டும் நிகழ்ச்சி
இ.பி.எஸ்., பிறந்த நாள் வாழ்த்து பேனர் ஒட்டும் நிகழ்ச்சி
இ.பி.எஸ்., பிறந்த நாள் வாழ்த்து பேனர் ஒட்டும் நிகழ்ச்சி
ADDED : மே 10, 2025 01:49 AM
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான இ.பி.எஸ்., பிறந்த நாள் விழா வரும், 12ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அவரது பிறந்த நாள் அன்று, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் சிவக்குமார் ஏற்பாட்டில், நகரில் ஓடும், 71 ஆட்டோக்களின் பின்புறம், இ.பி.எஸ்.,க்கு பிறந்த நாள் வாழ்த்து பேனர் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேனர்களை ஒட்டி வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் கேசவன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, ஐ.டி., பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.