/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மின்கம்பியை மிதித்த விவசாயி, 2 மாடு பலி
/
மின்கம்பியை மிதித்த விவசாயி, 2 மாடு பலி
ADDED : ஜூன் 19, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மற்றும் இரு பசுமாடுகள் பலியாகின.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நரசிம்மன். இவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு கட்டியிருந்த இரு பசுமாடுகளை, வீட்டிற்கு ஓட்டி வர சென்றார். அப்போது, நரசிம்மனின் நிலத்தில் உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதையறியாமல் சென்றபோது, கம்பியை மிதித்த நரசிம்மன் மற்றும் 2 பசுமாடுகளும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். கொண்டபாளையம் போலீசார் விசாரிரிக்கின்றனர்.