/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் ரோப்கார் வளாகத்தில் கருடாழ்வார் சிலை பிரதிஷ்டை
/
சோளிங்கர் ரோப்கார் வளாகத்தில் கருடாழ்வார் சிலை பிரதிஷ்டை
சோளிங்கர் ரோப்கார் வளாகத்தில் கருடாழ்வார் சிலை பிரதிஷ்டை
சோளிங்கர் ரோப்கார் வளாகத்தில் கருடாழ்வார் சிலை பிரதிஷ்டை
ADDED : ஏப் 12, 2025 09:35 PM

சோளிங்கர்ல:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமிர்தவல்லி தாயார் உடனுறை யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் எதிரே சின்னமலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.
யோக நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை அமைந்துள்ளது. நாடு முழுதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள், இந்த தலத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மலையேறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கடந்தாண்டு மார்ச் மாதம், பக்தர்களின் பங்களிப்புடன், ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், ரோப்கார் வளாக நுழைவாயில் எதிரே, நேற்று கருடாழ்வார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஏற்கனவே, ரோப்கார் வளாக நுழைவாயிலில் கோபுரம் அமைந்துள்ள நிலையில், தற்போது அந்த கோபுரத்தின் முன், கருடாழ்வார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.