/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பாம்புடன் ஜி.ஹெச்., வந்த தொழிலாளி
/
பாம்புடன் ஜி.ஹெச்., வந்த தொழிலாளி
ADDED : ஜன 30, 2024 03:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரை சேர்ந்தவர் தொழிலாளி கதிரவன், 38; இவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது கையில் கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. அப்பாம்மை அடித்து கொன்ற அவர், அப்பாம்புடன் ஆம்புலன்சில் அரக்கோணம் அரசு மருத்துவமனை சென்றார். இதை பார்த்து அங்குள்ளோர் அச்சமடைந்தனர். பின்னர், அங்கு கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்கு, சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.