/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் பாட்டியை கொலை செய்த பேரன்
/
வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் பாட்டியை கொலை செய்த பேரன்
வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் பாட்டியை கொலை செய்த பேரன்
வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் பாட்டியை கொலை செய்த பேரன்
ADDED : மார் 27, 2025 01:53 AM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த காவனுாரை சேர்ந்தவர் காசியம்மாள், 70. இவருடைய மூத்த மகன் குமார், 50. இவரின் மகன் தேவா, 25. மூன்றாண்டுகளுக்கு முன், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை, தேவா காதல் திருமணம் செய்தார்.
இந்த கோபத்தில் காசியம்மாள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பூர்வீக வீட்டை, பேத்தி பெயருக்கு எழுதி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த தேவா நேற்று காசியம்மாளிடம், வீட்டை எழுதி வைத்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரத்தில் கல்லால் தாக்கியதில் காசியம்மாள் சம்பவ இடத்தில் பலியானார். அதிர்ச்சியடைந்த தேவா தப்பியோடினார். திமிரி போலீசார் தேடி வருகின்றனர்.