/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கரில் ரோப் கார் சேவை துவக்கம்
/
சோளிங்கரில் ரோப் கார் சேவை துவக்கம்
ADDED : மார் 08, 2024 09:07 PM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோவிலில், யோக நரசிம்ம சுவாமி அருள்பாலித்து வருகிறார். 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
மலைக்கோவிலுக்கு, முதியோர், கர்ப்பிணியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், படியேறி வந்து சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வந்தனர்.
இதனால், மலைக்கோவிலுக்கு ரோப்கார் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 2010ல், இதற்கான திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது.
அரசு நிதி மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன் பணிகள் துவங்கி நடந்து வந்தன. 2023 மார்ச்சில் ரோப் கார் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து அடிவாரத்தில், ரோப் கார் மையத்தில், பக்தர்கள்காத்திருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
மொத்தம் 20 கோடியே 34 லட்சம் ரூபாய்மதிப்பில் பணிகள் நிறைவடைந்தன.
நேற்று காலை 10:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக, ரோப்கார் பயணத்தை துவக்கி வைத்தார்.