ADDED : அக் 19, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்,:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு, 38. இவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை அரக்கோணம் பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தார்.
இதையடுத்து அரக்கோணம் டவுன் போலீசார் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் ராணிப்பேட்டை எஸ்.பி., கிரண் ஸ்ருதி பரிந்துரை படி கலெக்டர் சந்திரகலா , பாபுவை குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் பாவுவை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.