தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ மொபைல் போன் பறித்தவர் கைது

மொபைல் போன் பறித்தவர் கைது

மொபைல் போன் பறித்தவர் கைது


ADDED : பிப் 06, 2025 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2025 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த, செய்யூரைச் சேர்ந்தவர் தீபத் ராஜ், 20; இவர், கடந்த மாதம், 28ம் தேதி இரவு, மோசூர் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் நின்று உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, தீபத் ராஜின் மொபைல் போனை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போனை பறித்து சென்றவரை தேடி வந்தனர்.

அப்போது மோசூர் ரயில் நிலையத்தில் மொபைல் போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மோசூர் ஜடேரி பகுதியைச் சேர்ந்த பொன்மணி, 29, என்பது தெரிய வந்தது.

இதையடுத்து பொன்மணியை கைது செய்த அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us