/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் பகல் பத்து உற்சவம் நாளை துவக்கம்
/
சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் பகல் பத்து உற்சவம் நாளை துவக்கம்
சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் பகல் பத்து உற்சவம் நாளை துவக்கம்
சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் பகல் பத்து உற்சவம் நாளை துவக்கம்
ADDED : டிச 29, 2024 09:17 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் உள்ளது. பக்தோசித பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்வம், தனுர் மாத உற்சவம் உள்ளிட்டவை நடக்கின்றன.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக நடத்தப்படும் பகல் பத்து உற்சவம், நாளை துவங்குகிறது. வரும் ஜன., 7ம் தேதி திவ்யதேச பாசுரமும், 9ம் தேதி ராப்பத்து திருவாய்மொழியும் துவங்குகிறது. ஜன.,20ம் தேதி இயற்பா சாற்றுமறையுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.