/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : அக் 16, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை அருகே, கடத்த முயன்ற, 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் போலீசார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், துரைபெரும்பாக்கம் பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு மினி வேனில், 3 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வேலுார் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மினி லாரி டிரைவரான மணிகண்டனை, 35, கைது செய்தனர்.