/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய 17 வீடுகள் அகற்றம்
/
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய 17 வீடுகள் அகற்றம்
ADDED : நவ 27, 2024 01:19 AM

அரக்கோணம்:அரக்கோணம் நகராட்சி காலிவாரி கண்டிகையில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை கால்வாயை சிலர் ஆக்கிரமித்த மாடி வீடுகள், ஓட்டு வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதே பகுதி சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து நீதிமன்றம் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று காலை அரக்கோணம் நகராட்சி ஆணையர் கன்னியப்பன், பொதுப்பணித்துறை அதிகாரி மெய்யழகன், தாசில்தார் ஸ்ரீதேவி ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமித்து கட்டியிருந்த, 17 வீடுகளை இடித்து அகற்றினர். பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடித்து அகற்றினர்.