/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சைபர் கிரைம் போலீசாக நடித்து கொள்ளையடித்த 6 பேர் கைது
/
சைபர் கிரைம் போலீசாக நடித்து கொள்ளையடித்த 6 பேர் கைது
சைபர் கிரைம் போலீசாக நடித்து கொள்ளையடித்த 6 பேர் கைது
சைபர் கிரைம் போலீசாக நடித்து கொள்ளையடித்த 6 பேர் கைது
ADDED : பிப் 11, 2025 05:24 AM
ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா, 40; சென்னை, தனியார் பொறியியல் கல்லுாரி பேராசிரியை. இவருக்கு, இரு மகன்கள். கணவரிடமிருந்து 2014ல் விவாகரத்து பெற்ற அவர், தாய், மகன்களுடன் ஆற்காட்டில் வசிக்கிறார்.
இரு நாட்களுக்கு முன் இரவில், அவரது வீட்டிற்கு, சென்னை 'சைபர் கிரைம்' போலீஸ் எனக்கூறி ஆறு பேர் வந்தனர். அவர்கள், 'உங்கள் வீட்டில் போதைப்பொருட்கள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சோதனை செய்ய வேண்டும்' எனக்கூறி வீட்டினுள் நுழைந்து, பீரோவில் இருந்த, 16 சவரன் நகை, 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.
ஆற்காடு டவுன் போலீசார் விசாரித்து, இதில் தொடர்புடைய, வேலுார் மாவட்டம், காட்பாடி தாராபடவேட்டைச் சேர்ந்த ராஜசேகர், 41, வேலுார் பிரகாஷ், 29, காதர், 20, ஜெகன், 20, விக்னேஷ்குமார், 27, தச்சூர் கார்த்திகேயன், 25, என, ஆறு பேரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

