தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ சோளிங்கர் ரோப்கார் சேவை நேரம் அதிகரிப்பு

சோளிங்கர் ரோப்கார் சேவை நேரம் அதிகரிப்பு

சோளிங்கர் ரோப்கார் சேவை நேரம் அதிகரிப்பு


ADDED : நவ 15, 2024 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது அமிர்தவல்லி தாயார் உடனுறை யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த கோவிலின் எதிரே சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.

யோக நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை அமைந்துள்ளது. நாடு முழுதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள், இந்த தலத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம், பக்தர்களின் பங்களிப்புடன், இங்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ரோப்கார் வாயிலாக பயணித்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளை 17 ம் தேதி முதல் வரும் டிச., 20ம் தேதி வரை கார்த்திகை திருவிழா நடைபெற உள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு உற்சவம் நடைபெறும். கார்த்திகை திருவிழாவின் போது வெள்ளிக்கிழமைகளில் காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் ரோப்கார் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us