/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் பெருமாள் கோவிலில் கோடை உத்சவம்
/
சோளிங்கர் பெருமாள் கோவிலில் கோடை உத்சவம்
ADDED : ஜூலை 10, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோளிங்கர்:யோக நரசிம்ம சுவாமியின் உத்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம் துவங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். யோக நரசிம்மரின் உத்சவமூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது.
பக்தோசித பெருமாள் கோவிலில் நேற்று கோடை உத்சவம் துவங்கியது. மாலை 5:00 மணிக்கு சுவாமி உள்புறப்பாடு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். கோடை உத்சவம், நாளை நிறைவடைகிறது.