/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
முதியவர் கொலையில் வாலிபருக்கு ஆயுள்
/
முதியவர் கொலையில் வாலிபருக்கு ஆயுள்
ADDED : நவ 10, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆற்காடு: ஆற்காட்டில், முன்விரோத தகராறில் முதியவரை கொன்ற வாலிப-ருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் கண்ணன், 85. இவரை, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், 23, என்பவர் கடந்த, 2018 டிச., 23 ல் முன்விரோத தகராறில் கொலை செய்தார். ஆற்காடு டவுன் போலீசார், கார்த்திக்கை கைது செய்து, ராணிப்பேட்டை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், நேற்று முன்தினம் மாலை கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.