/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மனைவியை எரிக்க முயன்று அவருடன் கணவரும் பலி
/
மனைவியை எரிக்க முயன்று அவருடன் கணவரும் பலி
ADDED : நவ 19, 2024 12:23 AM

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம், ஆர்.கே.பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி, 41. இவரது மனைவி சித்ரா, 32; தனியார் நிறுவன ஊழியர். தம்பதிக்கு, 10 மற்றும், 8 வயதில், இரு மகள்கள் உள்ளனர். தம்பதிக்குள் கருத்து வேறுபாடால், இரண்டு ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர்.
காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டையில் மகள்களுடன் சித்ரா வசிக்கிறார். கடந்த 12ல், இரவு சித்ரா வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்து வந்த ஒருவர், சித்ரா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில், உடல் முழுதும் தீப்பிடித்ததில், அதிர்ச்சியடைந்த சித்ரா, தீ வைத்தவரையும் கட்டிப் பிடித்ததில், அவர் மீதும் தீப்பிடித்தது.
இருவரது அலறல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து, இருவர் மீதும் பரவிய தீயை அணைத்தனர். முகமூடி அணிந்து தீ வைத்தது, சித்ராவின் கணவர் பாலாஜி என, தெரியவந்தது. தீக்காயமடைந்த இருவரும், வேலுார் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தனர். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

