/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
திருநாகேஸ்வரர் சுவாமி கோவில் குளம் சீரமைப்பு பணியில் தொடரும் தாமதம்
/
திருநாகேஸ்வரர் சுவாமி கோவில் குளம் சீரமைப்பு பணியில் தொடரும் தாமதம்
திருநாகேஸ்வரர் சுவாமி கோவில் குளம் சீரமைப்பு பணியில் தொடரும் தாமதம்
திருநாகேஸ்வரர் சுவாமி கோவில் குளம் சீரமைப்பு பணியில் தொடரும் தாமதம்
ADDED : ஏப் 21, 2025 02:30 AM

வளர்புரம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்தில் திருநாகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவில். இக்கோவில் திருக்குளத்தை சுற்றியும் சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு வேலி அமைத்தும் கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது.
இந்நிலையில், குளத்தை சுற்றியும் செடிகள் வளர்ந்து, படிகள் மற்றும் கரை சேதமடைந்துள்ளன. திருத்தணி கோவில் இணை ஆணையர் திருக்குளத்தை சீரமைக்க அனுமதி வழங்க கோரி, ஹிந்து அறநிலைய துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
தொடர்ந்து, ஆணையர் ஒப்புதலுடன், திருநாகேஸ்வர சுவாமி கோவில் திருக்குளத்தை சீரமைக்க, 1.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஜனவரி 9ம் தேதி டெண்டர் விடப்பட்டது.
பின், ஒப்பந்தாரருக்கு, கடந்த பிப்., 28ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால், திருக்குளம் சீரமைக்கும் பணிகளை துவக்க, கோவில் நிர்வாகம் அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது.
குளத்தை ஒன்பது மாதங்களில் சீரமைத்து தர வேண்டும் என, ஒப்பந்ததாரருக்கு காலக்கெடு வழங்கிய கோவில் நிர்வாகம், பணிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதால், சீரமைப்பு பணிகள் குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, திருத்தணி கோவில் நிர்வாகம் குளத்தை சீரமைக்க விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

