ADDED : ஜன 12, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:அரக்கோணம் பகுதியில் போலி டாக்டர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம் அரசு மருத்துவமணை மருத்துவ அலுவலர் ரெஜினா மற்றும் அரக்கோணம் தாலுகா போலீசார் நேற்று அரக்கோணம் சுற்றியுள்ள கிராமங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அரக்கோணம் கிரிபில்ஸ்பேட்டை காந்தி ரோட்டை சேர்ந்த ஜாகிர் உசேன், 45 என்பவர், பிளஸ் 2 படித்து விட்டு அரக்கோணம் அடுத்த கோணலம் கிராமத்தில் மருந்து கடை நடத்தியபடி அல்லோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது.
அதேபோல் அரக்கோணம் அடுத்த நரசிங்கபுரம் காலிபாய் நகரைச் சேர்ந்த பாரூக் உசேன், 48. என்பவர் ஐ.டி.ஐ., படித்துவிட்டு அதே பகுதியில் மருந்து கடை நடத்தியபடி அல்லோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது. இதனையடுத்து இருவரையும் அரக்கோணம் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.