/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பைக் - கார் மோதி இரு வாலிபர்கள் பலி
/
பைக் - கார் மோதி இரு வாலிபர்கள் பலி
ADDED : ஜூலை 14, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:பைக் மீது கார் மோதிய விபத்தில், இரு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில், கூடலுார் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், 24, கார்த்தி, 25, ஆகிய இருவர், நேற்று மாலை 'ஹோண்டா' பைக்கில் சென்றனர்.
எஸ்.ஆர்.கண்டிகை கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும், சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனால் ஆத்திரமடைந்த கூடலுார் கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் தாலுகா போலீசார் பேச்சு நடத்தினர். அதன்பின், மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.