/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
உறவினர் வீட்டில் 28 சவரன் நகை திருடிய பெண் கைது
/
உறவினர் வீட்டில் 28 சவரன் நகை திருடிய பெண் கைது
ADDED : மே 11, 2025 09:25 PM
அரக்கோணம்:அரக்கோணம் அருகே உறவினர் வீட்டில் நகை திருடிய பெண்ணை கைது செய்து, 28 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், அசோக் நகரைச் சேர்ந்தவர் தெய்வானை, 54; இவர், கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டி, சாவியை கோலமாவு டப்பாவில் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சென்றார். திரும்பி வந்தபோது, பீரோவில் இருந்த 28 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.
புகாரின்படி, அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வந்தனர். பெரம்பூரிலிருந்து உறவினரான சரஸ்வதி, 58, அடிக்கடி தெய்வானை வீட்டுக்கு வருவார். அப்போது அவர், சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டுள்ளார்.
கடந்த 6ம் தேதி தெய்வானை வெளியே சென்றிருந்ததை அறிந்து வந்த சரஸ்வதி, கோலமாவு டப்பாவில் வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டின் கதவை திறந்து, 28 சவரன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. நேற்று சரஸ்வதியை கைது செய்த போலீசார், 28 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.