/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ADDED : பிப் 13, 2025 08:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:அரக்கோணம் தாலுகா கும்பினிபேட்டை அருந்ததிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு, 22. இவர் தொடர் வழிப்பறி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். தாலுகா போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரை ராணிப்பேட்டை எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையின் படி கலெக்டர் சந்திரகலா, குண்டர் தடுப்பு காவலில் வைக்க நேற்று உத்தரவிட்டார். விஷ்ணுவை கைது செய்த போலீசார் வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.