/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ரவுடி மனைவியுடன் கள்ளத்தொடர்பு வாலிபர் கழுத்தறுத்து கொலை
/
ரவுடி மனைவியுடன் கள்ளத்தொடர்பு வாலிபர் கழுத்தறுத்து கொலை
ரவுடி மனைவியுடன் கள்ளத்தொடர்பு வாலிபர் கழுத்தறுத்து கொலை
ரவுடி மனைவியுடன் கள்ளத்தொடர்பு வாலிபர் கழுத்தறுத்து கொலை
ADDED : மே 08, 2025 12:47 AM
அரக்கோணம்,:மனைவியிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை, கழுத்தறுத்து கொலை செய்த ரவுடி போலீசில் சரணடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வெப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் லுாவியரசன், 34; ரவுடியான இவரது மனைவி கீர்த்தனா, 26. இவர்களுக்கு, இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும், கீர்த்தனாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்த லுாவியரசனுக்கு, தெரிந்தது. அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட லுாவியரசன், நேற்று முன்தினம் இரவு, அருண்குமாரிடம், ராணிப்பேட்டை மாவட்டம், ஆலப்பாக்கம் கிராமத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்று வரலாம் எனக்கூறி, பைக்கில் அழைத்து சென்றார்.
ஆலப்பாக்கம் கல்குவாரி அருகே செல்லும்போது பேசியதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், லூவியரசன், அருண்குமாரை துண்டால் கழுத்தை நெரித்துள்ளார். தொடர்ந்து பிறப்புறுப்பை கத்தியால் அறுத்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் அருண்குமார் இறந்தார்.
இதையடுத்து, காவேரிப்பாக்கம் போலீசில் லுாவியரசன் சரணடைந்தார். போலீசார், லுாவியரசனை கைது செய்தனர். அருண்குமார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லுாவியரசன் மீது, பானாவரம் மற்றும் காஞ்சிபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில், கொலை, கொள்ளை என ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன.