/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்ட நன்றி விழாஇ.பி.எஸ்.,க்கு விவசாயிகள் அழைப்பு

ADDED : பிப் 07, 2025 01:04 AM
அத்திக்கடவு - அவிநாசி திட்ட நன்றி விழாஇ.பி.எஸ்.,க்கு விவசாயிகள் அழைப்பு
சேலம், :அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற காரணமாக இருந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு, வரும், 9ல் கோவை மாவட்டம் அன்னுாரில் நன்றி தெரிவிப்பு விழா நடத்த, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, மக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் விவசாய சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள, இ.பி.எஸ்.,சை நேற்று சந்தித்தனர். அப்போது, விழாவில் பங்கேற்கும்படி, கூட்டமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், இ.பAி.எஸ்.,சிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கூட்டமைப்பினர் கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, 1,652 கோடி ரூபாய் ஒதுக்கி, 2018 பிப்., 28ல் அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார். பின் கூடுதல் மதிப்பீடுடன், 1,916 கோடி ரூபாய் செலவில் திட்டம் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆக., 17ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் விவசாயம் செழிப்படைந்து, கால்நடைகள், மக்களுக்கும் வேண்டிய தண்ணீர் தேவை பூர்த்தி அடைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.கோவை வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.