தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் பாட்டிலை வீசி தி.மு.க., கவுன்சிலர்கள் ரகளைசட்டையை பிடித்து இழுத்த ஏட்டுவிடம் வாக்குவாதம்

குடிநீர் பாட்டிலை வீசி தி.மு.க., கவுன்சிலர்கள் ரகளைசட்டையை பிடித்து இழுத்த ஏட்டுவிடம் வாக்குவாதம்

குடிநீர் பாட்டிலை வீசி தி.மு.க., கவுன்சிலர்கள் ரகளைசட்டையை பிடித்து இழுத்த ஏட்டுவிடம் வாக்குவாதம்


ADDED : மார் 01, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குடிநீர் பாட்டிலை வீசி தி.மு.க., கவுன்சிலர்கள் ரகளைசட்டையை பிடித்து இழுத்த ஏட்டுவிடம் வாக்குவாதம்

ஆத்துார்:டவுன் பஞ்சாயத்து கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் ஒருவர் மீது ஒருவர் என, மாறி மாறி குடிநீர் பாட்டிலை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஒரு கவுன்சிலர் சட்டையை பிடித்து ஏட்டு இழுத்துச்

சென்றதால், மற்ற கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி கவிதா தலைமை வகித்தார்.

அதில், 13வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் கலியவரதராஜ், 'சில வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆளுங்கட்சியில் உள்ள மற்ற தி.மு.க., - காங்., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை' என்றார். அதற்கு, 7வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் செந்தில், 'தவறான தகவல் கூற வேண்டாம்' என்றார்.

இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், அவர்கள் மேஜை முன் இருந்த குடிநீர் பாட்டில்களை எடுத்து, ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி வீசிக்கொண்டனர். அப்போது, தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு தங்கதுரை, கவுன்சிலர் செந்தில் சட்டையை பிடித்து இழுத்துச்சென்றார்.

இதனால் தலைவியின் கணவரான, தி.மு.க., கவுன்சிலர் ராஜா உள்ளிட்டோர், தங்கதுரையை சூழ்ந்து, 'ஆளுங்கட்சி கவுன்சிலரை, கூட்ட அறையில் எப்படி சட்டையை பிடித்து இழுத்துச்செல்லலாம்' என கேட்டு வாக்குவாதம் செய்தனர். மற்ற போலீசார் சமாதானம் செய்ததால் கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர். பின், 77 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தனர்.

ஆளுங்கட்சியினர் வெளியீடுகூட்டத்தில் நடந்த வாக்குவாதம், 'சிசிடிவி'யில் பதிவான வீடியோ காட்சிகளை, ஆளுங்கட்சியினர் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தலைவி கவிதா, துணைத்

தலைவி சந்தியா என, இரு அணிகளாக கவுன்சிலர்கள் உள்ளனர். 'நிதி' பிரச்னையை காரணம் கூறி, ஒருதரப்பினர், தலைவி மீது தொடர்ந்து புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அமைச்சர்கள் நேரு, ராஜேந்திரன் பலமுறை, 'பஞ்சாயத்து' நடத்தியும் தீர்வு ஏற்படாததால் தொடர்ந்து கவுன்சிலர்கள் தகராறு செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us