தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அ.தி.மு.க.,வில் இளம் தலைமுறை விளையாட்டு வீரர் அணிகபடி போட்டியை துவக்கிவைத்து இ.பி.எஸ்., பேச்சு

அ.தி.மு.க.,வில் இளம் தலைமுறை விளையாட்டு வீரர் அணிகபடி போட்டியை துவக்கிவைத்து இ.பி.எஸ்., பேச்சு

அ.தி.மு.க.,வில் இளம் தலைமுறை விளையாட்டு வீரர் அணிகபடி போட்டியை துவக்கிவைத்து இ.பி.எஸ்., பேச்சு


ADDED : மார் 23, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அ.தி.மு.க.,வில் இளம் தலைமுறை விளையாட்டு வீரர் அணிகபடி போட்டியை துவக்கிவைத்து இ.பி.எஸ்., பேச்சு

ஓமலுார்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்தநாளை ஒட்டி, சேலம் புறநகர் மாவட்டம், ஓமலுார் மேற்கு ஒன்றியம் சார்பில், மாநில அளவில், ஆண்கள், பெண்கள் மின்னொளி கபடி போட்டி நேற்று முன்தினம் வேலாக்கவுண்டனுாரில் தொடங்கியது. தமிழகத்தில் இருந்து, 34 ஆண்கள், 23 பெண்கள் அணிகள் மோதுகின்றன.

இரண்டாம் நாள் போட்டியை, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., நேற்று மாலை தொடங்கி வைத்து, வீரர், வீராங்கனையருக்கு வாழ்த்து தெரிவித்தார். சிறிது நேரம் போட்டியை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில், 12,524 ஊராட்சிகள், 500-க்கும் மேற்பட்ட டவுன் பஞ்சாயத்துகளில், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதை, தி.மு.க., அரசு கைவிட்டது. விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு ஏற்படுத்தி கொடுத்தது, அ.தி.மு.க., தான். தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக, 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழக உடற்பயிற்சி பல்கலைக்கு, 64 கோடி ரூபாயில், பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. வீரர்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, அவர்கள் திறமையை வெளிப்படுத்த, அ.தி.மு.க., சார்பில், 'இளம் தலைமுறை விளையாட்டு வீரர் அணி' தொடங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வீரர்களுக்கு, உபகரணங்கள் அனைத்தும், அ.தி.மு.க., சார்பில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், ஓமலுார் எம்,எல்.ஏ., மணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், மாநில ஜெ., பேரவை துணை செயலர் விக்னேஷ், ஓமலுார் மேற்கு ஒன்றிய செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us