/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிராக்டர் மீது தனியார் பள்ளி வேன் மோதல்மாணவன் உட்பட இருவர் பலி; 4 பேர் காயம்
/
டிராக்டர் மீது தனியார் பள்ளி வேன் மோதல்மாணவன் உட்பட இருவர் பலி; 4 பேர் காயம்
டிராக்டர் மீது தனியார் பள்ளி வேன் மோதல்மாணவன் உட்பட இருவர் பலி; 4 பேர் காயம்
டிராக்டர் மீது தனியார் பள்ளி வேன் மோதல்மாணவன் உட்பட இருவர் பலி; 4 பேர் காயம்
ADDED : மார் 25, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில், 163 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் நர்சரி வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 3:30 மணிக்கு பள்ளி முடியும். நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து போகனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, நர்சரி வகுப்பு மாணவ, மாணவியர், 9 பேரை ஏற்றிக்கொண்டு, பள்ளியின் மாருதி இகோ வேன் சென்றது. வேனை, வேப்பனஹள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி பந்திகுறியை சேர்ந்த சந்துரு, 22, ஓட்டினார்.
மாலை, 4:00 மணியளவில், பெத்தனப்பள்ளி பஞ்., வி.ஐ.பி., நகர் அருகே, கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் வேன் சென்றது. அப்போது முன்னால் சென்ற எம்.சாண்ட் லோடு ஏற்றிய டிராக்டர் திடீரென நின்றது. பின்னால் சென்ற பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதியது. இதில், பள்ளி வேனில் அமர்ந்திருந்த குழந்தைகள் அனைவரும் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் குழந்தைகளை மீட்டனர்.
கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி மற்றும் போலீசார் வந்தனர். படுகாயமடைந்த குழந்தைகள் அனைவரும், ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியில் எல்.கே.ஜி., மாணவர் ஹர்னிஷ், 4, உயிரிழந்தார். அதேபோல, டிராக்டரில் அமர்ந்து சென்ற பெரியமோட்டூரை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயா, 45, தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தனியார் பள்ளியில் பயிலும், போகனப்பள்ளி ஷர்வேஷ், 7, சுபேதார்மேடு காருண்யா, 3, அனிஷ்கா, 3, மணீஷ், 8, என, 4 குழந்தைகள் படுகாயமடைந்தனர். பள்ளி வேன் டிரைவர் சந்துரு, மற்றும் 4 பள்ளி குழந்தைகள், லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றனர்.