/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'விளம்பரங்களை அச்சிடும்போது அச்சக உரிமையாளர் முகவரி அவசியம்'
/
'விளம்பரங்களை அச்சிடும்போது அச்சக உரிமையாளர் முகவரி அவசியம்'
'விளம்பரங்களை அச்சிடும்போது அச்சக உரிமையாளர் முகவரி அவசியம்'
'விளம்பரங்களை அச்சிடும்போது அச்சக உரிமையாளர் முகவரி அவசியம்'
ADDED : மார் 22, 2024 01:36 AM
சேலம்:சேலம், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில், அச்சக உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் பேசியதாவது:தேர்தல் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டி போன்ற விளம்பரங்களை அச்சிடும்போது, கண்டிப்பாக அச்சக உரிமையாளர் பெயர், முகவரி இடம்பெற வேண்டும்.
அச்சடித்து முடித்த பின், அதன் நகல் ஒன்றை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு வகை சுவரொட்டி, துண்டு பிரசுரத்துக்கு தனித்தனியே அறிக்கை அளிக்க வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
துண்டு பிரசுரத்தில் சட்டத்துக்கு புறம்பாகவோ, மதம், இனம், மொழி, வகுப்பு, ஜாதி எதிர்ப்பு இருந்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும். கலெக்டர் அலுவலக தகவல் பலகையில், அச்சக உரிமையாளர்கள் வழங்கும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்படும். தேர்தல் செலவினத்தில் சேர்க்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.