தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழாதிருவிழா போன்று களைகட்டியது

பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழாதிருவிழா போன்று களைகட்டியது

பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழாதிருவிழா போன்று களைகட்டியது


ADDED : ஜன 11, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி,: இடைப்பாடி அருகே ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அப்பள்ளி தாரமங்கலம் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகவும், 'ஸ்மார்ட்' வகுப்பு கொண்ட பள்ளியாகவும் உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியரும், இந்த கல்வி மாவட்டத்தில் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதை கொண்டாடும்படி, பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர், ஊர்மக்கள் மூலம், கல்வி சீர் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்கு குரும்பப்பட்டியில் இருந்து ரெட்டிப்பட்டி வரை, மேள, தாளம் முழங்க, திருவிழா ஊர்வலம் போன்று, 3 கி.மீ., நடந்து வந்து, கல்வி சீர்களை கொடுத்தனர். அத்துடன், 3 டிராக்டர்களில், ஏராளமான பொருட்களை கொண்டு வந்தனர்.

மாணவ, மாணவியருக்கு தேவையான டிபன் பாக்ஸ், மர டேபிள், சேர், சிலேட், பேனா, விளையாட்டு பொருட்கள், ஸ்மார்ட் போர்டு, குடிநீர் குழாய்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜூ, வட்டார கல்வி அலுவலர் செந்தில்குமார், தலைமை ஆசிரியர் பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us