/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் கடத்தல் லாரிகள் சிறைபிடிப்புவிடுவித்ததாக ஆர்.ஐ., மீது புகார்
/
மண் கடத்தல் லாரிகள் சிறைபிடிப்புவிடுவித்ததாக ஆர்.ஐ., மீது புகார்
மண் கடத்தல் லாரிகள் சிறைபிடிப்புவிடுவித்ததாக ஆர்.ஐ., மீது புகார்
மண் கடத்தல் லாரிகள் சிறைபிடிப்புவிடுவித்ததாக ஆர்.ஐ., மீது புகார்
ADDED : ஜன 29, 2025 01:12 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, மதுர காளியம்மன் கோவில் காட்டில், நேற்று முன்தினம் இரவு, 3 டிப்பர் லாரிகளில் செம்மண்
அள்ளப்பட்டது. தொடர்ந்து வேகமாக சென்ற, 3 லாரிகளை, வடக்கத்திகாட்டில், மக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து பூலாம்பட்டி ஆர்.ஐ., ஆனந்தபாபுவிடம் தெரிவித்தனர். அவர், பூலாம்பட்டி போலீசில்
ஒப்படைப்பதாக கூறிவிட்டு, விடுவித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'பக்கநாடு, ஆடையூர் கிராமங்களில் இரவில் செம்மண் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. நாங்களே, 3 லாரிகளை பிடித்து கொடுத்தும் விட்டுவிட்டனர்' என்றனர்.
ஆர்.ஐ., ஆனந்தபாபு கூறுகையில், ''டிப்பர் லாரி பின்னாடியே வந்தேன். அந்த லாரி டிரைவர், வேகமாக ஓட்டிச்சென்றுவிட்டார். பக்கநாடு வி.ஏ.ஓ.,விடம், பூலாம்பட்டி போலீசில் புகார் கொடுக்க அறிவுறுத்தி உள்ளேன்,'' என்றார்.