/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
த.வெ.க., - மா.செ., அறிவிப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
/
த.வெ.க., - மா.செ., அறிவிப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
த.வெ.க., - மா.செ., அறிவிப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
த.வெ.க., - மா.செ., அறிவிப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ADDED : பிப் 01, 2025 01:10 AM
த.வெ.க., - மா.செ., அறிவிப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஆத்துார்:த.வெ.க.,வில், 120 மாவட்டங்களாக பிரித்து, மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை, அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்து வருகிறார். அதில் ஆத்துார், கெங்கவல்லி தொகுதிகள், சேலம் கிழக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாவட்ட செயலராக வெங்கடேசன், இணை செயலர் விஜய், பொருளாளர் முத்துகுமார், துணை செயலர்கள் சக்தி, அரவிந்த்குமார், செயற்குழு உறுப்பினர்கள், 10 பேரை, அக்கட்சி தலைமை, நேற்று அறிவித்தது. குறிப்பாக மாவட்ட செயலராக வெங்கடேசனை அறிவித்ததால், ஆத்துார், கெங்கவல்லி தொகுதியில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.