/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொது சுகாதார வளாகம் கட்டடவுன் பஞ்., சார்பில் பூமி பூஜை
/
பொது சுகாதார வளாகம் கட்டடவுன் பஞ்., சார்பில் பூமி பூஜை
பொது சுகாதார வளாகம் கட்டடவுன் பஞ்., சார்பில் பூமி பூஜை
பொது சுகாதார வளாகம் கட்டடவுன் பஞ்., சார்பில் பூமி பூஜை
ADDED : பிப் 18, 2025 01:37 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து காலனி பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகள் துவங்கும் போது, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிழக்கு காலனி பகுதியில், 14 சென்ட் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. நிலத்தை அந்த பகுதியில் உள்ள தனி நபர்கள், ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்க கோரி, பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. அப்போது அந்த இடத்தில், பொது சுகாதார வளாகம் கட்டப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை டவுன் பஞ்சாயத்து சார்பில் பூமி பூஜைக்கான பணி துவங்கப்பட்டது. அப்போது ஆக்கிரமிப்பு செய்த நபர்கள், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. பணிகள் துவங்கக் கூடாது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாயனுார் போலீசார் ஆக்கிமிரப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுக்கு சொந்தமான இடம் என்பதால், அந்த இடத்தில் பொது சுகாதார வளாகம் கட்டப்படுகிறது என்று தெரிவித்தனர்.
பின்னர், அந்த இடத்தில் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

