/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மண்டல கபடி போட்டி தி கொங்கு பாலிடெக்னிக் முதலிடம்
/
சேலம் மண்டல கபடி போட்டி தி கொங்கு பாலிடெக்னிக் முதலிடம்
சேலம் மண்டல கபடி போட்டி தி கொங்கு பாலிடெக்னிக் முதலிடம்
சேலம் மண்டல கபடி போட்டி தி கொங்கு பாலிடெக்னிக் முதலிடம்
ADDED : பிப் 22, 2025 01:34 AM
சேலம் மண்டல கபடி போட்டி
தி கொங்கு பாலிடெக்னிக் முதலிடம்
மல்லுார்:
சேலம் மண்டல அளவில், 2024 - -25ம் ஆண்டுக்கு, பாலிடெக்னிக் இடையேயான கபடி போட்டி, முத்தாயம்மாள் பாலிடெக்னிக்கில் நடந்தது. 15 அணிகள் மோதின. அதன் முடிவில், மல்லுார் தி கொங்கு பாலிடெக்னிக் அணி முதலிடம் பிடித்தது. இதன்மூலம், மாநில கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அந்த அணியில், தி கொங்கு பாலிடெக்னிக்கின், 3ம் ஆண்டு மாணவர்கள் தீனா, சந்தோஷ், தரணிதரன், 2ம் ஆண்டு மாணவர்கள் சஞ்சய், பிரியன், மனோ, தேவா, ரூபேஸ், விக்னேஷ்வரன், முதலாண்டு மாணவர்கள் நிஷாந்த், பிரசன்னா, பிரவீன்குமார், ஸ்ரீசாந்த், ஜனகரன் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களுக்கு, தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி தலைவர் ராமலிங்கம், செயலர் செந்தில்குமார், பொருளாளர் நாகராஜன் ஆகியோர், கோப்பை, பரிசுத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் முதல்வர் சரவணன், உடற்கல்வி பயிற்சியாளர் தமிழ்செல்வன், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியரும் பாராட்டினர்.

