/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது வளாகத்தில் போதிய கடைகள் இல்லைபுறக்கணிக்க காய்கறி வியாபாரி முடிவு

ADDED : பிப் 23, 2025 01:28 AM
புது வளாகத்தில் போதிய கடைகள் இல்லைபுறக்கணிக்க காய்கறி வியாபாரி முடிவு
ஓமலுார்:போதிய கடைகள் இல்லாததால், புது காய்கறி சந்தை வளாக கடைகளை புறக்கணிப்பதாக, ஓமலுார் வட்டார காய்கறி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், அங்குள்ள பஸ் ஸ்டாண்டில், 65 லட்சம் ரூபாயில் தினசரி காய்கறி சந்தை வளாகம் கட்டப்பட்டது. அதில், 40 கடைகள் உள்ளன. அதன் அருகே சிறு காலி இடம் உள்ளது. அதை சுற்றி கம்பி வேலி போடப்பட்டுள்ளது. ஆனால், 150க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் உள்ள நிலையில், 40 கடைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்வதில், காய்கறி வியாபாரி சங்கத்தினருக்கும், டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.
இதுகுறித்து அங்குள்ள ஒரு மண்டபத்தில், ஓமலுார் வட்டார காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் சிவமகேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் போதிய கடைகள் இல்லாததால் புதிதாக கட்டப்பட்ட கடையை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறை
வேற்றப்பட்டது. இதுதொடர்பாக, காய்கறி சந்தை வளாக திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் நேருவிடம், மனு அளித்தனர். அப்போது பெண் வியாபாரிகள் கண்ணீர் விட்டனர். காலி இடத்தில் இடம் வழங்க அறிவுறுத்தப்படும் என, அமைச்சர் தெரிவித்தார்.