/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் முன் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு
/
கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் முன் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு
கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் முன் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு
கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் முன் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு
ADDED : ஜூலை 12, 2011 12:39 AM
சேலம்: சேலம், தி.மு.க., கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம், மற்றொரு சொத்து அபகரிப்பு வழக்கில், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள சின்னேரியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மகன் சங்கர்(35). இவர் சின்னேரி பஞ்சாயத்தில் ஐந்தாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது தந்தை அய்யம்பெருமாளுக்கு, சொந்தமான, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1.6 ஏக்கர் நிலத்தை, கடந்த 1997ல் சித்தப்பா சுப்பிரமணியத்திடம் விற்பனை செய்துள்ளார். நிலத்திற்கு பேசிய தொகையை வாங்கிக் கொண்டு, கிரயம் செய்து கொடுக்க வில்லை. நிலத்தை ஸ்வாதீனம் செய்து வந்த சுப்பிரமணி, கிரயம் செய்து தரும்படி சங்கர் உள்ளிட்ட அவரது குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார். அவர்கள் நிலத்தை கிரயம் செய்து தர மறுத்ததால், கடந்த 2009ல் சுப்பிரமணியம், சேலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சேலம், தி.மு.க., கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம், பினாமிகள் இரண்டு பேர் பெயரில், அந்த நிலத்தை அய்யம்பெருமாள் குடும்பத்தாரிடம் இருந்து கிரயம் செய்து, தன்னை மிரட்டுவதாக கடந்த வாரம் எஸ்.பி., மயில்வாகனனிடம், சுப்பிரமணியம் புகார் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்தும்படி சேலம் மாவட்ட நில அபகரிப்பு மீட்பு குழு இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்திக்கு, எஸ்.பி., மயில்வாகனன் உத்தரவிட்டார். விசாரணை நடத்திய போலீஸார், ஆட்களை கொண்டு மிரட்டி, சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்தாக சங்கர், கணேசன், ஆட்டோ மாணிக்கம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஏற்கனவே சொத்து அபகரிப்பு வழக்கில், சிறையில் இருந்த ஆட்டோ மாணிக்கம் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தார். தற்போது சுப்ரமணியம் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் கைது செய்வதை தவிர்க்க, சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது, இன்று விசாரணை நடக்கிறது.